பைசர் மற்றும் பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசிக்கு கனடா அனுமதி அளித்துள்ள நிலையில் எதிர்வரும் செவ்வாய்கிழமை முதற்தடவையாக பயன்படுத்தப்டவுள்ளது.
ஒன்ராரியோவில் இந்த ஊசி பயன்படுத்தப்படவுள்ளதோடு ரொரண்டோ மற்றும் ஒட்டோவாவில் உள்ள இரண்டு மருத்துவ மனைகளிலும் வழங்கப்படவுள்ளது.
இதேவேளை, நீண்டகாலப் பரமரப்பு இல்லங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிப்பின் அடிப்படையிலேயே ஊசி வழங்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், பைசன் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள்தடுப்பூசியில் காணும் ஒவ்வொரு மேம்பட்ட விடயங்களையும் உடனுக்கு உடன் பகிர்வதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.