கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பளை,- புதுக்காட்டுச் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புலோப்பளை மேற்கு பகுதியை சேர்ந்த, 56 வயதுடைய, கிருஸ்ணன் நவநீதன் என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி நோக்கி பயணம் செய்த உந்துருளி மீது எதிரே வந்த பாரஊர்தி, புதுகாட்டுச்சந்தியில் திரும்பிய போது, இந்த விபத்து ஏற்பட்டதாக, ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் உந்துருளியில் பயணம் செய்த நபர் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி மருத்துவமனைக்கு செல்லப்பட்ட போது வழியில், உயிரிழந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.