சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, வரும் 13-ஆம் திகதி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் முதற்கட்ட தேர்தல் பரப்புரையை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைப்பில் கமல் ஹாசன் தென் தமிழகத்தில் இருந்து சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட தேர்தல் பரப்புரையை ஆரம்பிக்கவுள்ளார் என்று மக்கள் நீதிமய்யம் கட்சி தெரிவித்துள்ளது.
டிசம்பர் 13-ஆம் திகதி முதல் 16-ஆம் திகதி வரை மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் கமல் ஹாசன் பரப்புரை செய்யவுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.