கனடிய மண்ணில் சீனப் படைகளுக்குப் பயிற்சி அளிக்கப்படவில்லை என்று கனடாவின் தேசிய பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், கடந்த 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், கனடிய ஆயுதப்படைகளின் நடத்திய குளிர்கால பயிற்சி ஒத்திகையின் போது சீன படையினர் அதில் பங்கேற்றதாகவும் கனடிய பாதுகாப்பு திணைக்களம் கூறியுள்ளது.
சீனப் படையினர் இந்த பயிற்சிகளில் அவதானிப்பாளர்களாகவே பங்கேற்றனர் என்றும் நேரடியாகப் பங்கேற்கவில்லை என்றும் கனடிய பாதுகாப்பு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.





