கனடிய, அமெரிக்க எல்லை எதிர்வரும் ஜனவரி 21ஆம் திகதி வரையில் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடியப் பிரஜைகளின் பாதுகாப்பினை மையப்படுத்தியதாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த மார்ச் மாதத்திலிருந்து கனடிய, அமெரிக்க நிலத்தொடர்பு எல்லை ஊடான பயணங்கள் மாதாந்தம் அத்தியவசிய பயணங்களுக்கான அனுமதியுடன் நீடிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தது.