கிறிஸ்மஸ் பண்டிகையை அண்மித்த காலத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தினை அண்மித்ததாக இருக்கும் என்று கனடிய பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்திய நிலைமைகளின் அடிப்படையிலான கணிப்பீடுகளை கனடிய பொதுசுகாதாரத்துறையின் துணை அதிகாரி வைத்தியர் ஹோவர்ட் நூவுடன் வெளியிட்டார்.
இதன்போது, கிறிஸ்மஸ் தினத்தன்று கனடா 5இலட்சத்து 31 ஆயிரத்த300 முதல் 5 இலட்சத்து 77ஆயிரம் வரை தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.
அத்துடன் மொத்த இறப்புக்களானது, 14ஆயிரத்து 200 வரையில் உயர்வடையும் என்றும் அவர் கூறினார்.
கொரோனா தொற்று குறித்த வரைபானது, அதிகரிப்பு வீதத்தினையே வெளிப்படுத்தி நிற்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.