தற்கொலைகளை தடுக்கும் மூன்றிலிக்க அவசர இலக்கத்தினை அமுலாக்குவதற்கான நாடாளுமன்றம் பச்சைக்கொடி காட்டியுள்ளது.
தனிநபர் பிரேரணையாக முன்மொழியப்பட்ட தற்கொலை தடுப்புக்கான தேசிய ரீதியிலான அவசர தொலைபேசில இலக்கத்தினை அமுலாக்குவதற்கு ஏகமனதானஅங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் 988 என்ற இலக்கத்தினை செயற்பாட்டு ரீதியாக அமுலாக்குவதற்குரிய நடவடிக்கைகள் அடுத்து வரும் நாட்களில் முன்னெடுக்கப்படவுள்ளது.
கன்சர்வேட்டிக் கட்சியின் பிரிட்டிஷ்கொலம்பிய நாடாளுமன்ற உறுப்பினர் டோட் டோஹெர்டியினால் இந்த பிரேரணை கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.