மறுசீரமைக்கப்பட்ட ஆறு நடமாடும் கொரோனா சோதனை பேருந்துகள் வார இறுதியில் வெளிவருமென ரொரன்ரோ மேயர் ஜோன் டோரி தெரிவித்துள்ளார்.
ரொரன்ரோவில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டி.டி.சி பேருந்துகளிலிருந்து தயாரிக்கப்பட்ட நடமாடும் சோதனை தளங்கள் உள்ளன. இவை நகரம் உள்ளூர் சுகாதார ஒருங்கிணைப்பு வலையமைப்போடு இணைந்து செயற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ரொரன்ரோவில் கடுமையாகன தாக்கம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக இந்த திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது என்று மேலும் கூறினார்.