2020ஆம் ஆண்டின் சிறந்த நபர்களாக, அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்க உள்ள ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள, கமலா ஹரிஸ் ஆகியோரை, ரைம் நாளிதழ் தெரிவு செய்துள்ளது.
அமெரிக்காவின் ரைம் நாளிதழ் 1927 ஆம் ஆண்டு முதல் செய்திகளில் அதிகம் இடம்பெறும் நபர்களை தெரிவு செய்து, விருது வழங்கி கௌரவித்து வருகிறது.
இந்த ஆண்டிற்கான சிறந்த நபர்களாக, ஜோ பைடன் மற்றும் கமலா ஹரிஸ் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ள ரைம் நாளிதழ், அமெரிக்காவின் கதையை மாற்றியவர்கள் என்றும், புகழாரம் சூட்டியுள்ளது.