அரசுக்கு எதிரான போராட்டத்தை தூண்டினார் என்ற குற்றச்சாட்டில், ஈரான் ஊடகவியலாளர் ருஹோல்லா சாம் (Rouhollah Zam) முக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈரானில் ஊடகவியலாளர் ருஹோல்லா சாம் (Rouhollah Zam) என்பவர் இணைய இதழை தொடங்கி அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டு வந்தார்.
கடந்த 2017ஆம் ஆண்டில் ஈரானில் விலைவாசி உயர்வைக் கண்டித்து அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் வெடித்த போது, அதற்கு ஆதரவாகவும், அரசின் குறைகளை சுட்டிக் காட்டியும் ருஹோல்லா சாம் (Rouhollah Zam) தனது இணைய இதழில் செய்தி வெளியிட்டார்.
இதையடுத்து பொய்யான செய்திகள் மூலம் போராட்டத்தை தூண்டியதாக ருஹோல்லா சாம் (Rouhollah Zam) மீது ஈரான் அரசு வழக்கு பதிவு செய்த நிலையில், அவர் பிரான்சில் தஞ்சமடைந்தார்.
கடந்த ஆண்டு அவர் ஈராக்குக்கு செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டு, அவர் மீதான வழக்கை விசாரித்த ஈரான் நீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்தநிலையில், தெஹ்ரானில் உள்ள சிறையில் ருஹோல்லா ஜாம் (Rouhollah Zam) தூக்கிலிடப்பட்டுள்ளார்.