8 மாதங்களாக ஊதியம் கொடுக்காததால் ஆத்திரமடைந்த ஊழியர்கள், கர்நாடகாவில் உள்ள ஐபோன் தொழிற்சாலையை அடித்து நொருக்கி, வாகனங்களுக்கும் தீ வைத்துள்ளனர்.
கர்நாடக மாநிலம்- கோலார் மாவட்டத்தில் நரசப்புரா என்ற இடத்தில் ஐபோன் தொழிற்சாலை ஊழியர்களுக்கு 8 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.
ஊதியம் வழங்கக் கோரி நிர்வாகத்துடன், நடத்தப்பட்ட பேச்சுக்கள் தோல்வியடைந்த நிலையில், தொழிற்சாலை ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, ஆத்திரத்தில், தொழிற்சாலையின் நாற்காலிகள், கணினிகள், தொலைக்காட்சிப் பெட்டிகளை ஊழியர்கள் அடித்து நொருக்கியுள்ளனர்.
நிறுவனத்துக்கு சொந்தமான வாகனங்களும் அடித்து நொருக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறையினரால் தீ அணைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.