சோதனைக்குட்படுத்தப்படாத கொரோனா தொற்று நோய்க்கான மருந்துகள் என கூறப்படுகின்றவற்றை பயன்படுத்த வேண்டாமென பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக மூன்று மருந்துகள் சோதனை மட்டத்தில் இருப்பதாக தேசிய ஆராய்ச்சி மன்றம் தெரிவித்துள்ளது.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆயுர்வேத பாணி மருந்து சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்படவில்லை. அத்துடன் பாணி மருந்தினை தயாரித்த தம்மிக்க பண்டார ஒரு ஆயுர்வேத பயிற்சியாளராக பதிவு செய்யப்படவில்லையென தேசிய ஆராய்ச்சி மன்றம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.