மருதனார் மடம் சந்தையில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், திருநெல்வேலி சந்தையில் 39 பேரிடம் இன்று பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.
நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய, எழுமாற்றாக தெரிவு செய்யப்பட்ட 39 வியாபாரிகளிடம் இருந்து, பிசிஆர் சொதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே திருநெல்வேலி சந்தையில் பிசிஆர் சோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் பெரும்பாலும் இன்று மாலை முடிவுகள் கிடைக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.