இயல்பாகவே உடலில் ஒவ்வாமை உள்ளவர்கள் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியைப் பயன்படுத்த வேண்டாம் என்று கனடிய சுகாதாரத்துறை பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளது.
பிரித்தானியாவில் கடந்த செவ்வாய்கிழமையிலிருந்து தற்போது வரையில் இத்தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் ஒவ்வாமை உடையவர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையிலேயே கனடிய சுகாதாரத்துறை இவ்வாறான அறிவித்தலை விடுத்துள்ளது.
அதேநேரம் பிரித்தானியாவில் ஏற்பட்ட பக்கவிளைவுகள் மற்றும் ஏனைய அறிகுறிகள் தொடர்பாகவும் கனடிய சுகாதாரத்துறை ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளதோடு அதுபற்றி ஆய்வறிக்கைகளையும் ஆராய்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





