கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படவுள்ள பைசர் மற்றும் பயோஎன்டெக் தடுப்பூசியின் முதாலவது தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ரூடோ அறிவித்துள்ளார்.
தனது உத்தியோக பூர்வ கீச்சகப் பக்கத்தில் தடுப்பூசிப் பொதிகள் மற்றும் அவற்றை காவிவந்த வானூர்தி ஆகியவற்றின் புகைப்படங்களை அவர் பதிவு செய்துஇந்த அறிவிப்பினை விடுத்துள்ளார்.
தடுப்பூசியின் முதாலவது தொகுதியை காவிவந்த வானூர்தியானது, மொண்ட்ரீலில் உள்ள மிராபெல் (Mirabel) சர்வதேச வானூர்தி நிலையத்தில் தரை இறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து நாடாளவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள களஞ்சியசாலைகளுக்கு தடுப்பூசி பொதிகள் எடுத்துச் செல்லும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.