பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் இன்று பதவியேற்றுள்ளார்.
பத்தரமுல்லவில் உள்ள பொது பாதுகாப்பு அமைச்சின் செயலகத்தில் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ், இன்று காலை பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் றோகண தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் பொது பாதுகாப்பு அமைச்சர் றியர் அட்மிரல் சரத் வீரசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்டோர் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் புதிதாக உருவாக்கப்பட்ட பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக, தேசிய புலனாய்வு பணியகத்தின் தலைவராக இருந்த மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் கடந்த 10ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.