தமிழீழ விடுதலைப் புலிகளின் மதியுரைஞரும், தத்துவாசிரியருமான தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 14 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
1970ஆம் ஆண்டுகளில் விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட ஆரம்பித்த தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம், தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தை அனைத்துலக மயப்படுத்துவதிலும், கருத்தியல் ரீதியான பரப்புரைகளை முன்னெடுப்பதிலும் தீவிர பங்காற்றியவர்.
திம்பு பேச்சுவார்த்தை தொடக்கம், ஜெனிவாவில் நடந்த பேச்சுவார்த்தை வரை சிறிலங்கா அரசுடனும், அனைத்துலக தரப்புகளுடனும் இடம்பெற்ற பெரும்பாலான பேச்சுக்களில் விடுதலைப் புலிகளின் தரப்புக்கு இவர் தலைமை தாங்கியிருந்தார்.
2006ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் இதே நாளில் லண்டனில் புற்றுநோயினால் சாவைத் தழுவிய மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு தேசியத் தலைவர் தேசத்தின் குரல் என்ற உயர் விருதை அறிவித்து மதிப்பளித்திருந்தார்.