பொதுத் தேர்தலுக்கு அழுத்தம் கொடுக்க மாட்டேன் என்று கன்சர்வேட்டிக் கட்சியின் தலைவர் எரின் ஓ டூல் (ERAN O TOOL) தெரிவித்துள்ளார்.
லிபரல் கட்சி தலைமையிலான அரசாங்கம் கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்கும் செயற்பாட்டில் நெருக்கடியில் உள்ளது என்றும் அவர் கூறினார்.
இத்தகையதொரு நிலைமையில் தேர்தலை நடத்துவதற்கோ ஆட்சியை கைப்பற்றுவதற்கோ தான் விரும்பவில்லை என்றும் கூறினார்.
மேலும் கனடியர்கள் தங்களது வாக்குச் சீட்டை பயன்படுத்த வேண்டிய நேரத்தினை கன்சர்வேட்டிக் கட்சியினர் வெளிப்படுத்துவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.