கனடாவில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி நாடாளவிய ரீதியில் போடப்படவுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதலாவது கட்டத்தில் ஆயிரத்து 500 பேருக்கு தடுப்பூசியை போடுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக சுகாதாரத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தற்போது எதிர்வரும் செவ்வாய்கிழமை தடுப்பூசி போடப்படும் முதல் நாளாக இருப்பதால் ‘அன்றைய தினததினை ‘தடுப்பூசி தினம்’ என்று அழைக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் மருத்துவ காரணங்களுக்காக உன்னிப்பதாக அவதானிக்கப்படவுள்ளதாகவும் சுகாதாரத்துறையின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.