புத்தாண்டு கொண்டாட்டங்கள், பாரிய நிகழ்வுகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் தடைவிதித்துள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகவே புத்தாண்டு பிறப்பு கொண்டாட்டங்கள், பாரிய நிகழ்வுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் றோகண தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் கொண்டாட்டங்கள், குடும்பத்தினருடன் மாத்திரம் கொண்டாடப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் பாரிய நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
“கடந்த காலங்களைப் போல இந்த முறை புத்தாண்டைக் கொண்டாட முடியாது.
பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.
பொருட்களை கொள்வனவு செய்யும் போது சமூக இடைவெளியைப் பேண வேண்டும்.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.