கண்டம் விட்டு கண்டம் பாயும் புலாவா என்று பெயரிடப்பட்ட ஏவுகணையை, அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ரஷ்யா சோதனை செய்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு பாதுகாப்புத்துறை விடுத்துள்ள அறிக்கையில், பசிபிக் கடலில் விளாடிமிர் மோனோமாக் (Vladimir Monomakh) என்ற நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவுகணை சோதனை செய்யப்பட்டுள்ளது.
இவை குறிப்பிட்ட இலக்கை குறிதவறாமல் தாக்கியதாகவும் கடலுக்கு அடியில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணைகள் அமெரிக்காவின் எந்தப் பகுதியையும் தாக்கும் வல்லமை கொண்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.