வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலைக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளது. இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலையை சேர்ந்த குறித்த கைதிக்கு, கடந்த 12ம் திகதி மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதையடுத்து, அவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, வவுனியா– புதிய சாளம்பைக்குளம் பகுதியில் மேலும் மூன்று பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.