கொரோனா தடுப்பூசி இந்தியாவில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கொரோனா வைரஸ் குறும்பட விழாவில் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உரையாற்றிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.
“கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் விரைவில் இந்தியாவில் கிடைக்கும்.
தடுப்பூசி இரண்டாவது முறை வழங்கப்படுவதற்கு முன்பாக மக்கள் தமது பாதுகாப்பைக் குறைக்க வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.