மட்டக்களப்பு – கல்முனை வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தாழங்குடா பகுதியில், உந்துருளியும், மகிழுந்தும் நேர் மோதி இந்த விபத்து ஏற்பட்டதாகவும், இதில், உந்துருளியில் பயணித்தவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார் என்றும், காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் செங்கலடி பகுதியை சேர்ந்த, 26 வயதுடைய தர்சன் என்ற இளைஞனே, உயிரிழந்துள்ளார்.