கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட எஸ்வதினி (Eswatini) நாட்டு பிரதமர் அம்ப்ரோஸ் லாமினி திடீரென உயிரிழந்துள்ளார்.
ஆபிரிக்க கண்டத்தின் தெற்குப் பகுதியில் உள்ள முன்னர், சுவாசிலாந்து என்று அழைக்கப்பட்ட எஸ்வதினி (Eswatini) நாட்டின் பிரதமர் அம்ப்ரோஸ் லாமினியும் (Ambrose Dlamini) கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தார்.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும், அவரது உடல்நிலை சீராக, எந்த அறிகுறிகளும் இல்லாமல் இருந்தது.
இந்தநிலையில் எதிர்பாராத வகையில், நேற்று முன்தினம் பிரதமர் அம்ப்ரோஸ் லாமினி (Ambrose Dlamini) உயிரிழந்து விட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.