கனடிய மக்களின் கடன்சுமை மேலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக, அண்மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, நபர் ஒருவருக்கு தொழிலினால் வரும் வருமானம் வரி செலுத்திய பின்ன ஒரு டொலராக இருந்தால் அவர்களின கடன்சுமை 1.707 டொலராக காணப்படுகின்றது.
2019ஆம் ஆண்டின் இறுதிக்காலப்பகுதியின் இந்த பெறுமதி 1.81 ஆகக் காணப்பட்டது. கொரோனா காலப்பகுதியில் குறைந்து வந்தது. இப்பொழுது மீண்டும் அதிகரித்துள்ளது.
கொரோனா வின், ஆரம்ப முடக்க காலத்தில் மக்கள் வீட்டில் இருந்ததாலும், அரசாங்கத்தின் சலுகைகளாலும், அடமானக்கடன் பிற்போட்டதாலும் கடன் பளு குறைந்திருந்தது.
கொரோனா வின், மீதான மக்களின் நிலை மாற்றம் மற்றும் கனடியர்களிற்கு சம்பளம் கூடிய வேலைகள் கிடைப்பதாலும், மக்கள் தமது கடனை அதிகரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.