சிறிலங்காவில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 154ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இன்று மட்டும் 685 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்களில் 627 பேர் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் ஏனைய 58 பேர் சிறைச்சாலைக் கொத்தணியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 33 ஆயிரத்து 478ஆக அதிகரித்துள்ளது.