சிறிலங்கா விமானப்படையின் பயிற்சி வானூர்தி ஒன்று திருகோணமலையில் விபத்துக்குள்ளாகி வீழ்ந்து நொருங்கியுள்ளது.
விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும், PT-6 ரக விமானம், இன்று காலை சீனக்குடா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற பின்னர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.
விமானம் புறப்பட்டு 45 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும், இறுதியாக சூரியபுர பகுதியில் தென்பட்டதாகவும், சிறிலங்கா விமானப்படை பேச்சாளர் குறூப் கப்டன் டுஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
பயிற்சி விமானியுடன் சென்ற இந்த விமானத்தை சிறிலங்கா விமானப்படையினர் தேடி வந்த நிலையில், கந்தளாய் ஆற்றுப் பகுதியில் அது விழுந்து நொருங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் விமானி உயிரிழந்துள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.