மன்னார் – மாந்தை கிழக்கு பிரதேச செயலக பணியாளர்கள், இன்று காலை கண்டன போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
மாந்தை கிழக்கு பிரதேச செயலாளரின் அதிகாரபூர்வ தங்குமிடம் மீது கடந்த 10ஆம் திகதி இனம்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரச அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, கோரும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு பிரதேச செயலகப் பணியாளர்கள், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.