யாழ்ப்பாண மாவட்டத்தில், மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகிறது.
மருதனார்மடம் சந்தையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மறுநாள், சந்தைப் பகுதியில் சேகரிக்கப்பட்ட 114 பேரின் மாதிரிகள், அனுராதபுர ஆய்வுகூடத்துக்கு பிசிஆர் சோதனைக்காக அனுப்பப்பட்டிருந்தன.
இந்த மாதிரிகள் தொடர்பான பரிசோதனை முடிவுகள் மூன்று நாட்களின் பின்னர், யாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு கிடைத்துள்ளன.
இதன்படி, மருதனார்மடம் சந்தையுடன் தொடர்புடைய 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, மருதனார்மடம் சந்தை கொத்தணியில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக இனங்காணப்பட்ட நான்கு தொற்றாளர்களில், உடுவில் பகுதியை சேர்ந்த இருவரும், சண்டிலிப்பாய் மற்றும் தெல்லிப்பழை பகுதிகளைச் சேர்ந்த தலா ஒருவரும் அடங்கியுள்ளதாக சுகாதாரத் துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.