கீரிமலை அந்தியேட்டி மண்டபத்தில் பிதிர்க்கடன் கிரியைகளில் ஈடுபட்டிருந்த குருக்கள் மற்றும் பிரதேசசபை ஊழியர்கள் உட்பட பலர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
கொரோனா தொற்றுக்கு உள்ளான ஒருவர் கீரிமலை அந்தியேட்டி மண்டபத்திற்கு சென்றது தெரியவந்துள்ளதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கடந்த 12ஆம் நாள் அந்தியேட்டி கடமை ஒன்றை நிறைவேற்றுவதற்காக கீரிமலைக்கு சென்றிருந்தார் என்று கூறப்படுகிறது.
குறித்த நபர் கீரிமலைக்கு சென்றிருந்த போது, அங்கு வாகன பாதுகாப்பு வீதியில் கடமையில் இருந்த ஒருவர் மற்றும் உட்செல்பவர்கள் குறித்த விபரங்களை சேகரிக்கும் இருவர், பிரதேச சபை பணியாளர்கள் மூவர், மற்றும் அந்தியேட்டி கிரியைகளை மேற்கொள்ளும் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த குருக்கள் உள்ளிட்டவர்களே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.