அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள ஜோ பைடனுடன், ஆக்கபூர்வமான செயல்களில் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலக பாதுகாப்பை அதிகரிக்க உலக நாடுகள் தங்களது விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றாக பணியாற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
ஜோ பைடனை தொடர்புகொள்ள தான் தயாராக உள்ளதாகவும், ரஷ்ய ஜனாதிபதி புடினின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.