வடக்கு மாகாணத்தில் அடுத்த வாரம் குறுகிய நேரத்துக்குள் அதிக கன மழை பொழிவதற்கு சாத்தியம் உளள்ளதாகவும் இதனால் வெள்ளம் ஏற்படக் கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்றுறை விரிவுரையாளர் நா.பிரதீபராஜா இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.
“வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் 21ஆம் நாளுக்கும், 23ஆம் நாளுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சில மணி நேரத்துக்குள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்தக் கனமழை தாழ்வான பகுதிகளில் வெள்ள ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
எனவே, தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக இருப்பது அவசியமாகும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.