திருகோணமலை – பன்குளம் பகுதியில் யானைகள் ஊடுருவுவதை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு 11.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு காந்தி நகர்ப் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பரந்தாமன் கிருஷாந்தன் என்ற இளைஞனே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பன்குளம் ஆறாம் வாய்க்கால் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த போது, இந்த விபத்தில் சிக்கியுள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன.





