அமெரிக்க மக்களுக்கு கொரோனா தடுப்பூசி மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும் வகையில் அந்நாட்டு துணை ஜனாதிபதியான மைக் பென்ஸ் தடுப்பூசியை போட்டுக்கொள்ளவுள்ளார் என வெள்ளைமாளிகை தெரிவித்துள்ளது.
அவர் நாளைய தினம் பொதுவெளியில் வைத்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளார். அத்துடன் மைக் பென்ஸ் உடன் இணைந்து அவரது மனைவி கரீன் பென்சும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளார் என்று வெள்ளைமாளிகை தெரிவித்துள்ளது.
இதனால், கொரோனா தடுப்பூசி மீதான பொதுமக்களின் அச்சம் குறைந்து மக்கள் அதிக அளவில் தடுப்புசி போடும் நடவடிக்கையில் ஆர்வமுடன் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாகாணங்களுக்கும் கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டு கடந்த 14ஆம் திகதி முதல் அமெரிக்காவில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது.