பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் டொமினிக் ராப் (Dominic Raab) இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
இவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது விவசாயிகள் போராட்டம், இந்தோ, பசிபிக் கூட்டுறவு, கொரோனா தடுப்பூசி விநியோகம், மல்லயாவை இந்தியா அழைத்து வருவது உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
இந்தியாவில் அமைதியான போராட்டங்களுக்கு பாரம்பரியமான மரபு இருப்பதாக குறிப்பிட்டுள்ளதுடன், நிலைமையை கண்காணித்து வருவதாக சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட டொமினிக் ராப்(Dominic Raab) தெரிவித்துள்ளார்