எஹெலியகொட- தராபிட்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்விற்கு வருகைதந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கு எதிராக மக்கள் ஆர்பாட்டமொன்றை இன்று முன்னெடுத்திருந்தனர்.
அந்தப் பகுதியில் நீர் திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கான நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காகவே வாசுதேவ நாணயக்கார விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, அவ்விடத்திற்கு வந்த அமைச்சருக்கு எதிராக அப்பிரதேச மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீர் திட்டம் ஆரம்பிக்கப்பட்டால் பல சிக்கல்களுக்கு நாம் முகம்கொடுக்க நேரிடும் என என்று அமைச்சருக்கு சுட்டிக்காட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும் குறித்த பகுதியில் இருந்து வேறு பகுதிகளுக்கு நீரை வழங்கும்போது எதிர்காலத்தில் நீர் இன்றி எமது பிள்ளைகள் துன்பத்திற்கு உள்ளாக நேரிடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, அங்கு வந்திருந்த அமைச்சரின் செயலாளரை அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்த்ததமை குறிப்பிடத்தக்கது.