அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான காலப்பகுதிக்குள் கனடியர்களில் 19மில்லியன் பேருக்கான கொரோனா தடுப்பூசிகள் போடுவதற்கு எதிர்பார்ப்பதாக பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டின் மொத்த சனதொகை சதவீதத்தில் 40முதல் 50 சதவீதமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும், 414மில்லியன் தடுப்பூசி மருந்து நாட்டுக்குள் கொண்டுவரப்படவுள்ளதாகவும் அதற்குரிய அனைத்துச் செயற்பாடுகளும் பூர்த்தியாகி உள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், பைசர் மற்றும் மொடர்னா நிறுவனங்களிடமிருந்து தற்போது வரையில் 417ஆயிரம் தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.