நகரசபைகளுக்கு நிதியுதவி அளிக்கவும், எதிர்வரும் 2021ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் ஏற்படும் நிதிப்பற்றாக்குறை நெருக்கடிகளை தவிர்ப்பதற்காக ஒன்ராறியோ அரசாங்கம் மேலதிகமாக 695 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது.
ஸ்காபரோ – றூஜ் பார்க் மாநில சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்நிதி முதலீடுடானது, கடந்த கோடை காலத்தில் அறிவிக்கப்பட்ட மத்திய – மாநில அரசுகளின் ‘பாதுகாப்புடன் மீள ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தத்தின்’ முதற்கட்ட அடிப்படையில் உருவாக்கப்பட்டது
கொரோனா காலகட்டத்தில் நகரசபைகளுக்கும் அவற்றுடன் இணைந்து இயங்கும் சக கட்டமைப்புகளுக்கும் முக்கியமான சேவைகளை வழங்கவும் இந்த நிதியின் ஊடாக பங்களிப்புச் செய்ய முடியும் என்று மேலும் கூறப்பட்டது.