மாகாணங்கள் பல பனிப்புயலால் பாதிக்கப்படும் என கனடிய சுற்றுச்சூழல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது பிரிட்டிஷ் கொலம்பியாவின் சில பகுதிகளில் பனிப்பொழிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதோடு கியூபெக்கில் கடுமையான குளிர் நிலவுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோவா ஸ்கோட்டியாவில் கடுமையான பனி வரை உள்ளது. குறிப்பிடத்தக்க பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படும் போது பனிப்பொழிவு எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன.
நோவா ஸ்கோட்டியாவின் சில பகுதிகள் டிசம்பர் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலைக்குள் 25 சென்டி மீற்றர் பனிப்பொழிவைப் பெறும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மாகாணத்தின் சில பகுதிகள் மணிக்கு 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் என வும் கூறப்பட்டுள்ளது.