மேல் மாகாண எல்லைகளைக் கடந்து செல்பவர்களுக்கு இன்று காலை தொடக்கம், கொரோனா தொற்றைக் கண்டறியும், ராட் எனப்படும் துரித அன்ரிஜென் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
மேல் மாகாணத்தில் அதிகளவு கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து ஏனைய பகுதிகளுக்கு தொற்றாளர்கள் செல்வதை தடுக்கும் வகையில், இந்த சோதனை மறு அறுவித்தல் வரை மேற்கொள்ளப்படவுள்ளது.
எனினும் இந்தச் சோதனை அனைவருக்கும் மேற்கொள்ளப்படாது என்றும், எழுமாற்றாகவே நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
காவல்துறையினரின் உதவியுடன், மேற்கொள்ளப்படும் இந்தச் சோதனைகளில் மாகாண சுகாதார மருத்துவ அதிகாரிகளால் நியமிக்கப்பட்ட குழுக்கள் ஈடுபடுகின்றன.
கண்டி- கொழும்பு வீதியில் நிட்டம்புவ பகுதியிலும், அவிசாவளை – கொழும்பு வீதியில் சவாவ, கொஸ்கம பகுதியிலும், கொழும்பு- சிலாபம் வீதியில், கட்டுநாயக்க பகுதியிலும் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.