வவுனியா – திருநாவற்குளத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திருநாவற்குளத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவருக்கு சில நாட்களுக்கு முன்னர், கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து, அவரது மனைவி, பிள்ளைகள் மற்றும் அவரது வீட்டில் தங்கியிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இவர்களுக்கு, மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளிலேயே, நான்கு பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், திருநாவற்குளம் பிரதேசம் முடக்கப்படலாம் என்று, சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, வவுனியாவில் சாளம்பைக்குளம் கிராமம் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.