ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் இரண்டாவது வருடமாகவும் முறையாக நத்தார் பண்டிகையை கொண்டாட முடியாமல் போயுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
நத்தார் பண்டிகைக் காலத்தில் பயணங்களை மட்டுப்படுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பேராயர் இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
நத்தார் பண்டிகையின் போது ஏனைய மக்களை போன்று நாமும் அர்ப்பணிப்புடன் செயற்படுவது உகந்ததென நினைப்பதாக கூறியுள்ளார்.
மேல் மாகாணத்தில் கொரோனா நிலைமை பாரதூரமாக உள்ளதால் கொழும்பிற்குள் பிரவேசிப்பதையோ அல்லது கொழும்பில் இருந்து வேறு பகுதிகளுக்கு செல்வதையோ இயன்றளவு குறைத்துக்கொள்ளுமாறு கொழும்பு பேராயர் மக்களிடம் கோரியுள்ளார்.





