அமெரிக்காவின் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் (Mike Pence) தொலைக்காட்சி நேரலையில் கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றிக் கொண்டுள்ளார்.
தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதும் அவர், மருத்துவர்கள் மற்றும் தொலைக்காட்சி பார்வையாளர்களை பார்த்து, தான் எதையும் உணரவில்லை என்று கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்று அமெரிக்க மக்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்காகவே, மைக் பென்ஸ் தொலைக்காட்சி நேரலையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.