அமெரிக்க அரசுத் துறைகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதை அடுத்து, அமெரிக்க அரசின் முக்கிய துறைகள் ஆபத்தில் இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்க அரசின் முக்கிய துறைகளின் கணினிகளில் இணைய முடக்கிகள், ஊடுருவிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அரசின் முக்கிய துறைகளை குறிவைத்து பல மாதங்களாக இந்த சைபர் தாக்குதல், நடத்தப்பட்டு வந்துள்ளது என்று அமெரிக்க அதிகாரிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
இந்த தாக்குதலால் அமெரிக்காவின் அரசு முகவர் அமைப்புகள், முக்கிய அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆபத்தில் இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சைபர் தாக்குதலை தடுப்பது மிகவும் சிக்கலானது என அமெரிக்காவின் சைபர் பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.