காங்கேசன்துறை பகுதியில் அமைந்துள்ள சீமெந்துத் தொழிற்சாலை மற்றும் துறைமுக அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடல், வடமாகான ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று இடம்பெற்றது.
இதில், இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர அமைச்சின் செயலாளர், ஆளுநரின் செயலாளர், உதவிச் செயலாளர், மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.
காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலைக்கு அண்மையிலுள்ள நிலத்தின் உரிமம் தொடர்பான பிரச்சினை, காங்கேசன்துறைக்கும் காரைக்காலிற்கும் இடையில் படகுச்சேவை ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையின் அபிவிருத்தி மற்றும் இறங்கு துறை அபிவிருத்தி தொடர்பாகவும் விரிவாகக் உரையாடப்பட்டுள்ளது.
இதன்போது, கருத்துத் தெரிவித்த ஆளுநர், காங்கேசன்துறை நிலப்பகுதியில் துண்டங்களாக காணப்படும் பகுதிகளின் உரிமை தொடர்பான பிரச்சினைகளை காணி நில அளவைத் திணைக்களத்தின் உதவியுடன், கள விஜயம் மேற்கொண்டு உறுதிப்படுத்துமாறு பணிப்புரை விடுத்தார்.