யாழ். சர்வதேச விமான நிலையத்தை மூடுவது தொடர்பில் அரசாங்கத்திற்கு எவ்வித தீர்மானமும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழ். சர்வதேச விமான நிலையம் தொடர்பில் ஊடகங்களில் வெளியான கருத்துக்கள் குறித்தி கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
கடற்றொழில் அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்ற யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதுவர் பாலச்சந்திரனுடனான சந்திப்பின் போது அமைச்சர் இது தொடர்பில் தெளிவூட்டியதாக கடற்றொழில் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா வழங்கியுள்ள 300 மில்லின் ரூபா நிதியுதவியை பயன்படுத்தி, விமான நிலையத்தின் அடுத்த கட்ட புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இந்தியத் துணைத் தூதுவருக்கு அமைச்சர் எடுத்துரைத்துள்ளார்