எம்.சி.சி.உடன்படிக்கை கைவிடப்பட்டுள்ள போதிலும் சிறிலங்காவில் கால்பகுதிக்கும் தங்கள் திட்டத்தை அமெரிக்காவும் அதன் சகாக்களும் ஒருபோதும் கைவிடப்போவதில்லை என தொழில்சார்நிபுணர்கள் தேசிய முன்னணி என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
எம்.சி.சி மூலம் வழங்கப்படவிருந்தது நிதியுதவியில்லை மாறாக அமெரிக்காவும் இந்தியாவும் முன்னெடுத்துள்ள இந்தோ பசுபிக் தந்திரோபாயத்தின் ஒரு பகுதி என அமைப்பின் பொதுச்செயலாளர் பொறியியலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
எம்.சி.சி. உடன்படிக்கையை தனியாக பிரித்துப்பார்க்க முடியாது மாறாக சோபா ஏபிஎஸ்ஏ போன்றவற்றுடன் சேர்த்து பார்க்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது அமைப்பும் ஏனைய தேசப்பற்றுள்ள அமைப்புகளும் எம்.சி.சி. உடன்படிக்கையால் ஏற்படக்கூடிய ஆபத்தினை அடையாளம் கண்டுகொண்டன. நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியை மக்களும் உணர்ந்து கொண்டன எனவும் அவர் கூறியுள்ளார்.