அமெரிக்காவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், ஜோ பைடன் பதவியேற்பு விழாவுக்குப் பொதுமக்கள் வரவேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக, ஜோ பைடன், ஜனவரி 20- ஆம் திகதி பதவியேற்கவுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவுக்கு 2 இலட்சம் பேருக்கு அழைப்பு விடுக்கப்படுவது வழக்கமாகும்.
எனினும், இந்த முறை புதிய அதிபர் ஜோ பைடனின் பதவி ஏற்பு விழா எளிமையாக நடைபெறுகிறது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். எனவே பதவி ஏற்பை காண்பதற்காக மக்கள் யாரும் நேரில் வர வேண்டாம்’ என்று கூறப்பட்டுள்ளது.