பிஜி நாட்டில் கடந்த 2 நாட்களாக யாசா புயல் ஏற்படுத்திய பாதிப்புகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.
பிஜி தீவின் தேசிய பேரிடர் மேலாண் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், பாதுகாப்பு படைகள், அத்தியாவசிய பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுக்களை வனுவா லேவு தீவில் அதிக அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்தள்ளது.
மேலும் மேசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.